தூத்துக்குடியில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு தமிழன்டா சங்கமம் விழா, தமிழர் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை ஒருங்கிணைத்த விழாவாக சிறப்புடன் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தமிழரின் பாரம்பரிய உணவான கஞ்சி குடிக்கும் உணவுத் திட்டத்தை அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தொடங்கி வைத்தார். பாரம்பரிய உணவுகளின் அவசியத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழன்டா மற்றும் Tutify இணைந்து நடத்திய 500 பேர் பங்கேற்ற கின்னஸ் உலக சாதனை கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. Tutify சார்பில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் பாராட்டி வாழ்த்தினார். பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த சாதனை நிகழ்வை வெற்றிகரமாக்கினர்.
மேலும், தமிழன்டா விருது வழங்கும் நிகழ்வும் விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக அமைந்தது. மூன்றாம் ஆண்டு தமிழன்டா சங்கமம் விழாவில், அதன் நிறுவனத் தலைவர் திரு. ஜெகஜீவன், தொழில் அதிபர் திரு. பொன் குமரன், மற்றும் ஸ்பிக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் இணைந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அருணா தேவி ரமேஷ் பாண்டியன் அவர்களுக்கு நினைவுக் கோப்பை வழங்கி கௌரவித்தனர்.
விழாவில் உரையாற்றிய அருணா தேவி ரமேஷ் பாண்டியன், “தமிழர் பாரம்பரியம், உணவு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழன்டா சங்கமம் போன்ற நிகழ்வுகள் அந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றுகின்றன,” என்று தெரிவித்தார்.
தமிழர் மரபு, சாதனை மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மூன்றாம் ஆண்டு தமிழன்டா சங்கமம் விழா, பொதுமக்களின் பாராட்டையும் பெரும் வரவேற்பையும் பெற்றது.