கோவில்பட்டி நகரம் நேற்று உற்சாகக் கடலில் மூழ்கியது. திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இளையரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள தந்தை கலைஞர் முழுஉருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்து பொதுமக்களிடம் உற்சாகத்தைக் கிளப்பினார்.
முதல்வரின் வருகையை ஒட்டி நகரம் முழுவதும் திருவிழா தோற்றம் பெற்றது. தாரை தப்பட்டை முழங்க, மக்கள், நிர்வாகிகள், கட்சியினர் ஆகியோர் பெரும் ஆரவாரத்துடன் முதல்வருக்கு வரவேற்பளித்தனர். மாநிலம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களை துவக்கி வைத்து வருகின்ற முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கும் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோவில்பட்டியை வந்தடைந்தார்.
மதுரையில் இருந்து காரில் கோவில்பட்டியை வந்த அவர், அங்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதா ஜீவன், ராமச்சந்திரன், நேரு, பொய்யகருப்பன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ராஜா, மேயர் ஜெகன் பெரியசாமி, நகர தலைவர் கருணாநிதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரின் உற்சாக வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட நூலகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பார்வையாளர் பதிவேட்டில் தனது கையெழுத்தை பதிவு செய்தார். பின்னர் தேநீர் அருந்தி புதிய அலுவலகத்தின் உள்பகுதிகளை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
விழாவில், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளிச் செங்கோல் வழங்கினர். அதே நேரத்தில், அலுவலகம் கட்டுவதற்கான நிலத்தை இலவசமாக அளித்த கே.ஆர் கல்வி நிறுவன தாளாளர் கே.ஆர். அருணாசலம் அவர்களின் மகன் நிதிஷ்குமாரை முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், மாவட்டதிட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், சிவசுப்பிரமணியம், விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், துணை அமைப்பாளர் சண்முகராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், நகர பொறுப்பாளர் சுரேஷ், வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் அழகாசாமி, இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமணி, கடம்பூர் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி நாகராஜா, வாணிக அணி அமைப்பாளர் விஸ்வநாதராஜா, அயலக அணி துணை அமைப்பாளர் கண்டி சுப்பாராஜ், ஓன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி, பிரதிநிதிகள் அசோக்குமார், முருகன், பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் சீனிவாசன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், முன்னாள் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பாலமுருகன், தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. டிஜிபி சந்தோஷ் ஹாதிமணி தலைமையில், தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான், நெல்லை எஸ்பி சிலம்பரசன், தென்காசி எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கலைஞர் கனவு கண்ட மக்கள் நல அரசியலை நினைவூட்டும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கோவில்பட்டி நகரின் அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாகப் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி
கலைஞரின் கனவுகள் நிறைவேறும் நிலம் – கோவில்பட்டியில் திமுக அலுவலகம், வெண்கல சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் புதிய திமுக நகரக் கழக அலுவலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா — முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!
அடுத்த
“முதல்வரை பாசமுடன் வரவேற்றார் மேயர் ஜெகன் பெரியசாமி!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026