தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட நகர திமுக அலுவலகம் மற்றும் திமுக முன்னாள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையிலிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகை தந்தார்.
முதல்வரின் இந்த வருகையின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நினைவு பரிசு வழங்கி அன்புடன் வரவேற்று சிறப்பித்தார். முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் மாவட்ட திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பெருமளவிலான திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி உற்சாகம், கைத்தட்டல், மற்றும் “ஸ்டாலின் வாழ்க!” என்ற முழக்கங்களால் களைகட்டியது.
தூத்துக்குடி
“முதல்வரை பாசமுடன் வரவேற்றார் மேயர் ஜெகன் பெரியசாமி!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கலைஞரின் கனவுகள் நிறைவேறும் நிலம் – கோவில்பட்டியில் திமுக அலுவலகம், வெண்கல சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!
அடுத்த
புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை தீவிரம் – தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் நீட்டிப்பு அவசியம்!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026