தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட இளையரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்பட்டு, நூலக வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி திமுக நகரக் கழக அலுவலகக் கட்டிடத்தை நேற்று (28.10.2025) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதே நேரத்தில், அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையையும் அவர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த சிறப்புவிழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், பி. கீதா ஜீவன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, மார்கண்டேயன், ரகுராம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தலைமை செயற்குழு உறுப்பினர் என். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரா. ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் (கோவில்பட்டி மேற்கு) எஸ். பாலமுருகன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி. ஜெயக்கண்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ. சந்திரக்கண்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் புதிய திமுக நகரக் கழக அலுவலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா — முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன்!
அடுத்த
கலைஞரின் கனவுகள் நிறைவேறும் நிலம் – கோவில்பட்டியில் திமுக அலுவலகம், வெண்கல சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026