கவுசானல் மாநிலத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி, 31.01.2026 அன்று காலை தூத்துக்குடியில் கோலாகலமாக தொடங்கியது.


தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதிலிருந்து பதிவு செய்த 16 அணிகள் அமெச்சூர் கபாடி கழக விதிமுறைகளின்படி செயற்கை ஆடுகளத்தில் (Mat Match) போட்டியிட்டன. இந்தப் போட்டிகள் 31.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய இரு தினங்களாக நடைபெற்றன.


இந்த நிகழ்ச்சியில் பேரருட்சகோ A. விக்டர்தாஸ் தி.இ.ச (சபைத் தலைவர், திரு இருதய சகோதரர்கள் சபை, பாளையங்கோட்டை), பேரருட்சகோ A. ஸ்டீபன் ஆரோக்கியசாமி தி.இ.ச (கவுசானல் மாநிலத் தலைவர், விக்கிரமசிங்கபுரம்), பேரருட்சகோ I. ஸ்டீபன் சவரிராஜ் தி.இ.ச (அஞ்சலோ மாநிலத் தலைவர், திருச்சி), Lion ஹாஜி P. மீராசா மரைக்கயார் (மாவட்டத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஜாமியா பள்ளிவாசல் தலைவர், தூத்துக்குடி), அருள்மிகு அருள்வாக்கு வேல்முருகன் சுவாமிகள் (விளாத்திகுளம் ஒன்றிய துணைச் சேர்மன், மேல்மாந்தை) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து அருட்சகோ R. ஆரோக்கியம் பீற்றர் தி.இ.ச (தாளாளர், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) மற்றும் அருட்சகோ முனைவர் J. கஸ்மீர் தி.இ.ச (தலைமையாசிரியர், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளராக அருட்சகோ A. பிரிட்டோ தி.இ.ச (இந்திய செயலர், பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு, தாளாளர், கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை) செயல்பட்டார்.


போட்டிகளை அருட்சகோ R. சைனி சக்ரவர்த்தி தி.இ.ச (இயக்குநர், புனித மரியன்னை கருணை இல்லம், மில்லர்புரம்), அருட்சகோ ஜோ அந்தோணி தி.இ.ச (தலைமையாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, V.K.புரம்), அருட்சகோ ஜோசப் லாசர் தி.இ.ச (மாநில நிதியர், கவுசானல் மாநிலம், சுகாலயம், V.K.புரம்), அருட்சகோ ஜோ அருள்ராஜ் தி.இ.ச (மாநில ஆலோசகர் மற்றும் முதல்வர், திரு இருதய மழலையர் தொடக்கப் பள்ளி, பணகுடி) ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.


பெண்களுக்கான கபாடி போட்டியில் முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகளாக தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. ஆண்களுக்கான கபாடி போட்டியில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகளாக தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. அனைத்து பரிசுகளுக்கும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.


ஆண்கள் பிரிவில் முதல் பரிசை தாரிணி இன்சூரன்ஸ், தூத்துக்குடி அணி பெற்றது. இரண்டாம் பரிசு நேசம்மாள், முத்தையாபுரம், மூன்றாம் பரிசு மணிமுத்தாறு காவல்துறை, நான்காம் பரிசு கலசலிங்கம் யுனிவர்சிட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அணிகளுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் முதல் பரிசு பாரதி, நெல்லை, இரண்டாம் பரிசு மின்னல், கோவில்பட்டி, மூன்றாம் பரிசு வளர்பிறை, தென்காசி, நான்காம் பரிசு ரத்தினா 7, காயல்பட்டினம் அணிகள் பெற்றன.


பரிசு வழங்கும் நிகழ்ச்சி 01.02.2026 நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் S. குழந்தை, தமிழ்நாடு காவல்துறை ஸ்ரீவைகுண்டம் திரு ராஜா, தேசிய கபாடி வீரர் சண்முகசுந்தரம், முன்னாள் தேசிய கபாடி வீரர் R. கண்ணன், முன்னாள் மாநில கபாடி வீரர் J. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ்வரன் சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வீரர்களை வாழ்த்தினார்.


இதனுடன் மில்லர்புரம் 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் M. பொன்னப்பன், P&T காலனி 15வது வார்டு உறுப்பினர் V. இசக்கிராஜா, 17வது வார்டு உறுப்பினர் T. ராமர், அண்ணாநகர் திமுக பகுதிச் செயலாளர் D.A. ரவீந்திரன், 16வது வார்டு உறுப்பினர் P. கண்ணன், 18வது வார்டு உறுப்பினர் T. ஜாண் (எ) சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


விளையாட்டு காயங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து Dr. J. விஜய சொருபன் M.S (Ortho), Devajothi Ortho & Spine Care, மில்லர்புரம் விளக்க உரையாற்றினார். அனைத்து வீரர்களுக்கும் உணவு ஏற்பாடுகளும், வெளிமாவட்ட அணிகளுக்கு தங்குமிட வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.