தூத்துக்குடியில், தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில், கதை சொல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள அற்புத மணி மரியதாஸ் இல்லத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில், பாக்கியம் அவர்கள் கடவுள் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தருவைக் குளம் கிளை செயலாளர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தாம் படித்த சிறந்த கதைகளை பகிர்ந்து கொண்டு கதை சொல்லி அனைவரையும் ஈர்த்தார். தொடர்ந்து சார்லஸ் புஷ்பராஜன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ஜெயம், பேட்ரிக் ஆகியோரும் தங்கள் கதைகளை வாசித்து கேட்டோர் மத்தியில் பாராட்டுகளை பெற்றனர்.
இந்நிகழ்வில் செல்வின், அன்டனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக, தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தாளமுத்துநகர் கிளை செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளர் அ. ரவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். கதை சொல்லும் விழா இலக்கிய ரசனையுடன் இனிதே நிறைவுற்றது.