தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட சூரங்குடி மற்றும் சிவஞானபுரம் கிராமங்களில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயங்கள் சிறப்பாக நடைபெற்றன.


சூரங்குடி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


அதேபோல் சிவஞானபுரம் கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற 8-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தையும் G.V.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சிகளில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சிமுனியசாமி, சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் மகேஷ், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா, திமுக கிளைச் செயலாளர்கள் சந்திரசேகரன், சடையாண்டி, சரவணன், அழகர்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் தமிழர் பண்பாட்டை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயங்கள் பொதுமக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.