தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 30வது வார்டு டூவிபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் கோலப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
கோலப்போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். அவருடன் பா.ஜ.க. ஆன்மிகப் பிரிவு இணை அமைப்பாளர் உஷாதேவி கலந்து கொண்டு வெற்றியாளர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் தனசேகரன், வேலுச்சாமி, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தையும் பெண்களின் கலைத் திறமையையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த கோலப்போட்டிக்கான ஏற்பாடுகளை 30வது வார்டு பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான காசிலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.