தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் த் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு அறிவுசார் உரையாடல்களும் நிறைந்ததாக அமைந்தது.


இந்தச் சந்திப்பின் போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக கொண்டு துளசி சட்டக் கல்லூரி முதல்வர் எழுதியுள்ள நூலை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு வழங்கினார். கலைஞரின் அரசியல் பயணம், சமூக சீர்திருத்தச் சாதனைகள், தமிழ் மொழிக்கான அவரது பங்களிப்புகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


நூலைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையும், சமூகநல சிந்தனைகளையும் இளம் தலைமுறையிடம் கொண்டு செல்லும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்தார். மேலும், கல்வி மற்றும் சட்டத்துறையுடன் சமூக விழிப்புணர்வு இணையும் போது சமுதாய மாற்றம் வேகமாகும் எனவும் அவர் கூறினார்.


இந்த நிகழ்வின்போது, மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், பேராசிரியர் கோமதி, நம் நாடு நம் மக்கள் எதிர்காலம் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்து இந்த சந்திப்பை சிறப்பித்தனர்.