கவுசானல் மாநிலத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி இன்று காலை தூத்துக்குடியில் கோலாகலமாக தொடங்கியது.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் இன்று (31.01.2026) மற்றும் நாளை (01.02.2026) நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் பேரருட்சகோ A. விக்டர்தாஸ் தி.இ.ச, சபைத் தலைவர், திரு இருதய சகோதரர்கள் சபை, பாளையங்கோட்டை, பேரருட்சகோ A. ஸ்டீபன் ஆரோக்கியசாமி தி.இ.ச, கவுசானல் மாநிலத் தலைவர், விக்கிரமசிங்கபுரம், பேரருட்சகோ I. ஸ்டீபன் சவரிராஜ் தி.இ.ச, அஞ்சலோ மாநிலத் தலைவர், திருச்சி, Lion ஹாஜி P. மீராசா மரைக்கயார், மாவட்டத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஜாமியா பள்ளிவாசல் தலைவர், தூத்துக்குடி, அருள்மிகு அருள்வாக்கு வேல்முருகன் சுவாமிகள், விளாத்திகுளம் ஒன்றிய துணைச் சேர்மன், மேல்மாந்தை ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து அருட்சகோ R. ஆரோக்கியம் பீற்றர் தி.இ.ச, தாளாளர், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அருட்சகோ முனைவர் J. கஸ்மீர் தி.இ.ச, தலைமையாசிரியர், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளராக அருட்சகோ A. பிரிட்டோ தி.இ.ச, இந்திய செயலர், பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு, தாளாளர், கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை செயல்பட்டார்.
போட்டிகளை அருட்சகோ R. சைனி சக்ரவர்த்தி தி.இ.ச, இயக்குநர், புனித மரியன்னை கருணை இல்லம், மில்லர்புரம், அருட்சகோ ஜோ அந்தோணி தி.இ.ச, தலைமையாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, V.K.புரம், அருட்சகோ ஜோசப் லாசர் தி.இ.ச, மாநில நிதியர், கவுசானல் மாநிலம், சுகாலயம், V.K.புரம், அருட்சகோ ஜோ அருள்ராஜ் தி.இ.ச, மாநில ஆலோசகர் மற்றும் முதல்வர், திருஇருதய மழலையர் தொடக்கப் பள்ளி, பணகுடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெண்களுக்கான கபாடி போட்டியில் முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000, நான்காம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. ஆண்களுக்கான கபாடி போட்டியில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000, நான்காம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. அனைத்து பரிசுகளுக்கும் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் S. குழந்தை, தமிழ்நாடு காவல்துறை ஸ்ரீவைகுண்டம் திரு ராஜா, தேசிய கபாடி வீரர் சண்முகசுந்தரம், முன்னாள் தேசிய கபாடி வீரர் R. கண்ணன், முன்னாள் மாநில கபாடி வீரர் J. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மில்லர்புரம் 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் M. பொன்னப்பன், P&T காலனி 15வது வார்டு உறுப்பினர் V. இசக்கிராஜா, 17வது வார்டு உறுப்பினர் T. ராமர், அண்ணாநகர் திமுக பகுதிச் செயலாளர் D.A. ரவீந்திரன், 16வது வார்டு உறுப்பினர் P. கண்ணன், 18வது வார்டு உறுப்பினர் T. ஜாண் (எ) சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விளையாட்டு காயங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி Dr. J. விஜய சொருபன் M.S (Artho), Devajothi Ortho & Spine Care, மில்லர்புரம் விளக்க உரையாற்றினார். மாநிலம் முழுவதிலிருந்து பதிவு செய்த 16 அணிகள் அமெச்சூர் கபாடி கழக விதிமுறைப்படி செயற்கை ஆடுகளத்தில் (Mat Match) போட்டியிடுகின்றன. அனைத்து வீரர்களுக்கும் உணவு ஏற்பாடும், வெளிமாவட்ட அணிகளுக்கு தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மத நல்லிணக்கம், இளைஞர் எழுச்சி மற்றும் விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கவுசானல் மாநில வெள்ளி விழா மின்னொளி கபாடி போட்டி, விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.