தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 பெற்ற பயனாளி ஒருவர் தனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.


“சார், என்ன சிறப்பு என்றால் இந்த மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 பெற்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் அன்று என் பிறந்தநாள்,” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “அன்று இந்த தொகையை பெற்றபோது, என் அப்பா கையால் பரிசு பெற்றது போல ஒரு உணர்வு வந்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக இது மாறிவிட்டது,” என்றார். எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் நன்றியுடன் தெரிவித்தார்.


மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார நம்பிக்கையை உருவாக்கி வருகிறது என்பதற்கு இந்நிகழ்வே சாட்சி என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிறந்தநாளில் கிடைத்த இந்த உதவி, ஒரு பெண்ணின் மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் விதைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.