அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, முன்னாள் முதல்வரும் மக்கள் திலகமுமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகர் 12வது நான்கு ரோடு சாலை சந்திப்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சி 45வது வார்டு அமமுக வட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேத மாணிக்கம், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியின் போது, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் 45வது வார்டு அமமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மக்கள் நலப் பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். விழா முழுவதும் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.