தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென தனி மாநிலம் உருவான நாளைக் குறிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தினம். இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய அரசு 1956 நவம்பர் 1 அன்று இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. இதன் மூலம் சென்னை மாகாணத்திலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, கேரளா, ஆந்திரா, மைசூர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில், தமிழர் வாழும் பகுதிகள் இணைந்து தமிழருக்கென தனி மாநிலம் அமைந்தது.
இந்த வரலாற்று நாளை நினைவுகூர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டுக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கி, பெருமையுடன் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மா.மு.தமிழ்நேயன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செ.இசக்கித்துரை, சு.அன்னலட்சுமி, மண்டலச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர்கள் செல்லப்பா, முருகன் ஆகியோரும், நாம் தமிழர் கட்சி உறவுகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தமிழ்நாடு நாளை சிறப்பாகக் கொண்டாடிய நாம் தமிழர் கட்சி – ஓட்டப்பிடாரம் தொகுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு பள்ளியில் பேச்சுப்போட்டி – வெற்றியாளர்களுக்கு காவல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க செயற்குழு கூட்டத்தில் 2026 ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள்!!
இதையும் படிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சி – தூத்துக்குடியில் ஆவின் பாலகம்–Friends Coffee Cafe-ஐ திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
13 Jul 2026
நட்பும் கல்வியும் சமூக முன்னேற்றத்தின் தூண்கள் – தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வில் வலியுறுத்தல்!!
13 Jul 2026
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளையின் கரம் நீட்டிய உதவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்!!
13 Jul 2026
தனசேகர் நகரில் மதுபானக் கடையால் பொதுமக்கள் அச்சம் – நடவடிக்கை இல்லை என்றால் காங்கிரஸ் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம்: சகாயராஜ், பெருமாள்சாமி எச்சரிக்கை!!
13 Jul 2026