தூத்துக்குடி 3வது மைல் பகுதியில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகம் – Friends Coffee Cafe திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) காலை சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், தூத்துக்குடி மாநகர மேயர் திரு. ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டி ஆவின் பாலகத்தை திறந்து வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திருமதி கீதா ஜீவன் கலந்து கொண்டு ஆவின் பொருட்களின் விற்பனையை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்தகைய முயற்சிகள் பெரிதும் உதவியாக இருக்கும் என பாராட்டினார்.
கடை திறப்பு விழாவையொட்டி இருதய நண்பர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு ஜெபம் நடைபெற்றது. மேலும், ALL CAN TRUST நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் Lion. M. மருதப்பெருமாள், M.Com, செயலாளர் திரு. ஜெயராஜ், பொருளாளர் திரு. செல்வகுமரன், நிர்வாகிகள், உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் மேம்பாடு மற்றும் பொருளாதார தன்னிறைவை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆவின் பாலகம் – Friends Coffee Cafe, பொதுமக்களுக்கு தரமான ஆவின் பால் பொருட்கள் மற்றும் காபி சேவைகளை வழங்கும் வகையில் செயல்பட உள்ளது. விழா நிறைவில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, குழு புகைப்படம் எடுக்கப்பட்டதுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.