தூத்துக்குடி அலங்காரத்தட்டு அருகே சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்து கடும் அவதிக்குள்ளான ஏழு குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. தீ விபத்தால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்த குடும்பங்களின் நிலையை அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அன்னை தெரசா அறக்கட்டளை, மனிதநேய அடிப்படையில் உடனடி உதவியாக அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கியது.



நிகழ்ச்சிக்கு தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை தாங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் தொம்மை அந்தோணி, துணைத்தலைவர் ரமேஷ், செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மேலும், அறக்கட்டளையின் பொருளாளர் முத்து முனியசாமி, துணைச் செயலாளர் வினோத்சிங், அமைப்பாளர் ஜெயசீலன், துணை அமைப்பாளர் முத்துக்குமார், துணைப் பொருளாளர் அழகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரை பகிர்ந்து கொண்டு, அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதநேய சேவைக்கு அப்பகுதி மக்கள் அன்னை தெரசா அறக்கட்டளையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.