தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கிய பேரவை சார்பில் இலக்கிய மற்றும் சிந்தனைப் பகிர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை ஆயர் இல்ல இளையோர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொடுவானம் கலை இலக்கிய பேரவைத் தலைவர் நெல்லை தேவன் வரவேற்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆல்பர்ட் தலைமை வகித்தார்.



நிகழ்வில் வ.உ.சி. கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆரோக்கிய செல்வ சுந்தரி சிறப்புரையாற்றி, மனித வாழ்வில் நட்பின் அவசியம், நல்ல நண்பர்களின் வழிகாட்டுதல் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதில் நட்பின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.



அதைத் தொடர்ந்து, எழுத்தாளரும் பெருங்குளத்தைச் சேர்ந்த முனைவர் மணிமொழி செல்வன், "கல்வியின் மாண்பு" என்ற தலைப்பில் உரையாற்றி, கல்வி தனிமனித முன்னேற்றத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பதை வலியுறுத்தினார்.



மேலும், ஆசிரியரும் இலக்கியச் செல்வருமான சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் சாந்தி பிரபு, இலக்கிய ஆர்வலர் பத்மநாபன், கலைவளர்மணி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக, ஓய்வு பெற்ற கருவூலத்துறை அலுவலர் செய்து முகமது ஷெரிப் நன்றியுரை ஆற்றினார்.



இந்த நிகழ்வில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.