தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத் தேர்வு 09.12.2025 அன்று நடைபெற்றது. கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளித்து அவர்களின் திறன்களை மேம்படுத்தினார்.

பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஹோலிகிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ரொசாரியோ சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.

கராத்தே பயிற்சியாளர்கள் மாரிமுத்து, மணிமுத்து, தனபால் ஆகியோர் முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர்.