தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் (ஸ்மார்ட் சிட்டி) அருகில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நேச்சுரல் பியூட்டி அகடாமி மற்றும் திஷா அகாடமி இணைந்து நடத்தும் இலவச பெண்களுக்கான அழகுகலை பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

நேச்சுரல் பியூட்டி அகடாமி மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் நிர்வாக அதிகாரி சிவக்குமார், திஷா பியூட்டி அகடாமி மற்றும் திஷா குரூப் ஆஃப் பயிற்சி மையம் சேர்மன் விஜயலெக்ஷ்மி ஸ்ரீதர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

பெண்களுக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச அழகுக்கலை பயிற்சி மைய திறப்பு விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசும் போது அமைச்சர் கீதா ஜீவன், “பெண்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சுயநிறைவு வாழ்க்கைக்கும் இந்த அழகுக்கலை பயிற்சி மையம் பெரும் பயனளிக்கும். நல்ல முறையில் பயிற்சி பெற்று உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுங்கள்” எனவும் தெரிவித்தார்.