உணவுக் கழகம், துறைமுக தொழிலாளர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று ஐஎன்டியுசி அமைப்புச் செயலாளர் கதிர்வேல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்திய உணவுக் கழகத்தில் கடந்த 1998 முதல் 5000 தொழிலாளர்கள் இன்று வரை தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் அவர்கள் பணியில் சேர்ந்தனர் ஆனால் நிர்வாகம் தெரிவித்தபடி ஊதியம் வழங்கவில்லை.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் 25 வருட சட்டப் போராட்டத்திற்கு பின் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பை பெற்றோம் டெல்லி மத்திய அரசு தொழிலாளர் நல ஆணையம் தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனவே மீண்டும் மத்திய அரசு மீது வழக்கு தொடர உள்ளோம். தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் பொறியாளர் டாக்டர் உள்ளிட்ட பெரிய பதவிகளுக்கு வடநாட்டவருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்படுகிறது.
தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட கீழ்நிலை பணிகள் மட்டும் நம் பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது மோசமான செயலாகும். விளை பொருள் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
இதை வலியுறுத்தி தான் பஞ்சாப் விவசாயிகள் போராடினார்கள். விவசாயிகள் உணவுக் கழக தொழிலாளர்கள் துறைமுக தொழிலாளர்கள உள்ளிட்ட பல்வேறு தரப்பு தொழிலாளர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டம் ஐஎன்டிசி சார்பில் தூத்துக்குடியில் விரைவில் நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி
உணவுக்கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் - ஐ.என்.டி.யு.சி அமைப்புச் செயலாளர் கதிர்வேல் பேட்டி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுனர் மற்றும் தூய்மை பணியாளர் நல சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
ஆல்.கேன்.டிரஸ்ட், லயன்ஸ் கிளப் இணைந்து ஈஸ்டர் சிறப்பு நாளையொட்டி முத்துநகர் கடற்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பூங்காக்கள் தூய்மை படுத்தப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026