தமிழக அரசே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமே, அவர்லாண்ட் ஒப்பந்த நிர்வாகமே,

வடக்கு மண்டலத்தில் பணிபுரிந்து வந்த ஐந்து தூய்மை பணி வாகன ஓட்டுனர்களை மண்டல மாறுதல் செய்ததை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் வேலை பார்த்த அதே டிவிசனில் பணி வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிற்சங்க விரோதம் கொண்டு தொழிலாளர்களை பணியில் இருந்து எந்த விசாரணையும் இன்றி நிறுத்தி வைப்பது மண்டல மாறுதல் வழங்கி தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
G.O. (2D) NO, 62 LABOUR EMPLOYMENT (J1) நாள் (11.102017) தமிழக அரசாணைப்படி மாநகராட்சி அடிப்படை ஊதியம் ரூ. 13,000/- அகவிலைப்படி ரூ. 5848/- என தூய்மை பணியாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ. 18,848/- ம், ஓட்டுனர்கள் SEMI SKILLED GRADE க்கு மாத அடிப்படை ஊதியம் ரூ. 14,000/- அகைவிலைப்படி ரூ. 5848/- என மாத ஊதியம் 19,848/- என வழங்க நடவடிக்கை எடு.
ஓட்டுனர்கள், தூய்மைபணியாளர்களின், P.F. பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தொழிலாளர் கணக்கில் வரவு வைத்து அடையாள அட்டை வழங்கவும், E.S.I. திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் தகராறு சட்டப்படி ஆண்டில் 300 நாள் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியின்படியும் அனைத்து தொழிலாளர்களையும் பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும். (அரசு ஊழியர்களாக்க வேண்டும்)
பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.
SPARE (ஸ்பேர்) ஓட்டுனர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு முறையான அடையாள அட்டை (ID CARD) வழங்க வேண்டும்.
சம்பள பில் மாத மாதம் வழங்க வேண்டும்.
விழாக்கால விடுமுறைகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனைவருக்கும் வழங்க வேண்டும்.
வடக்கு மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்களை பழிவாங்கும் விதமாகவும் மிரட்டி வேலை வாங்குவதை தொடர்ந்து செய்து வரும் பழக்கம் மண்டல அவர்லாண்ட் IN CHARGE மாரிமுத்து மற்றும் மேற்பார்வையாளர்கள் விமல் (டிவிசன் 1), விநாயக ராஜ் (டிவிசன் 2), முத்துவேல் (டிவிசன் 3), ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (19.04.2025) மாலை வி.வி.டி. சிக்னல் பாளை ரோடு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் தோழர். பொன்ராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தோழர். முருகன், செயலாளர் தோழர். சதன்ராஜ், பொருளாளர் தோழர். பாலமுருக பெருமாள், இணை செயலாளர் தோழர். சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
AICCTU அகில இந்திய தலைவர் தோழர். சங்கர், CPI(ML) மாநில செயலாளர் தோழர். பழ. ஆசைத்தம்பி, AICCTU மாநில தலைவர் தோழர். சங்கரபாண்டியன், AICCTU மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். சகாயம், AICCTU தோழர். மின்னல் அம்ஜத், AICCTU மாவட்ட செயலாளர் தோழர். சிவராமன், CPI(ML) மாவட்ட பொறுப்பாளர் தோழர். முருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இணை செயலாளர் தோழர். சுகுமார் நன்றியுரை ஆற்றினார்.
ஆர்பாட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுனர் மற்றும் தூய்மை பணியாளர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.