தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலையில் அமைந்துள்ள மீன் வளக் கல்லூரி முன்புற ஓடையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூர் வாரும் பணியின் முன்னேற்றம், நீர் ஓட்டம் தடையில்லாமல் செல்லும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் மதிப்பாய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
மக்களின் நலனை முன்னிட்டு மழைக்காலத்திற்கு முன் நகரின் வடிகால் அமைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரநாயக்கன்தட்டில் உப்பாற்று தூர்வாரும் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
அடுத்த
பனை விதை விதைப்போம் – பனை மரம் காப்போம்! இயற்கையை காக்கும் நோக்கில் ALL CAN TRUST அமைப்பின் 386வது வார பனை விதை நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026