இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ALL CAN TRUST அமைப்பு சார்பில் இன்று (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி, 386வது வார பனைவிதை விதைப்பு நிகழ்வு தூத்துக்குடி ராஜபாளையம் கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், 1000க்கும் மேற்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டு, சுற்றுச்சூழலை பசுமையாக்கும் பணியில் பங்கேற்ற இளைஞர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

“பனை விதை விதைப்போம்... பனை மரம் காப்போம்...!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்த இலக்கில்லா பனைவிதை முயற்சியில் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த அனைத்து இளைஞர்களுக்கும் ALL CAN TRUST குடும்பத்தினர் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

இயற்கையை நேசிப்போம்... பனைமரத்தை வளர்ப்போம்!