தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளப்பட்டி கடற்கரை கிராமத்தில் உள்ள நல்ல ஆலோசனை மாதா ஆலய பங்கின் கடல் மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அசன பெருவிழா இந்த ஆண்டும் மே 13ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
பங்குத்தந்தை வினித்ராஜா தலைமையில், ஊர் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பெருவிழாவில், வெள்ளப்பட்டி பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, கடல் மாதா திருவுருவப் படம் வண்ண மீன் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கடலில் மிதக்க விடப்பட்ட காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. கடற்கரையே ஆன்மிக ஒளியில் மிளிர்ந்தது.
இந்த அசன பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை வினித்ராஜா, ஊர் நிர்வாகிகள், அனைத்து சபையினரும் மற்றும் அன்பியங்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.