கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவுறுத்தலின்பேரிலும், மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவின் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதையும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வு நடத்த அனுமதிக்க மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன கூட்டத்திற்கு நகர தலைவர் கே.டி.பி. அருண்பாண்டியன் மற்றும் வட்டார தலைவர் சி. ரமேஷ்மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். INTUC ராஜாசேகரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், ஏ.எக்ஸ். ஜேம்ஸ் லாரன்ஸ், முன்னாள் மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆல்வார்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, எஸ்.சி./எஸ்.டி. பிரிவு மாநில துணை தலைவர் ஏ. மாரிமுத்து, PCC உறுப்பினர் மகேஷ்குமார், கயத்தார் வட்டார தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் PCC உறுப்பினர்கள் மாரியம்மாள், உமாசங்கர், வட்டார தலைவர்கள் சங்கர், மரியசூசை ராஜ், பழனிசாமி, கொம்பையா, டி.பி. ஹரிபாலகிருஷ்ணன், ஆல்வின், குருசாமி, எஸ்.எம். தாஸ், நல்லமதி, தட்சணாமூர்த்தி, சண்முகவேல், மாரியப்பன், முனியசாமி, கே.டி. பிச்சைகனி, சுந்தர்ராஜ், வேல்சாமி, ஐயம்மா, குருநாதன், கிருபாகரன், விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.