தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை சார்பில் நேற்று மாலை விவிடி சிக்னலில் வைத்து வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் மௌலானா அல்ஹாஜ் ஷேக் முஹம்மது மிஸ்பாஹி தலைமையில், நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஜமா அத்துல் உலமா சபை சார்பாக மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாலை நடைபெற்ற வகுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கண்டன பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை மாநில பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில பொதுச் செயலாளர் ஹாஜா கனி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நபவி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காயல் மஹபூப், தூத்துக்குடி ஜமாத் உலமா சபை மாவட்ட தலைவர் இம்தாதுல்லா பாகவி, மற்றும் தூத்துக்குடி அனைத்து இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், ஜமாத் நிர்வாகிகள், மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். 