பாரத ரத்னா டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஏப்ரல் 14ம் தேதியான இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை. ஜெகன் மூர்த்தியாரின் ஆணைக்கிணங்க, கட்சியின் முதன்மைச் செயலாளர் ருசேந்திரகுமார், கட்சியின் மாநில செயலாளர் பரணிமாரி, ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் வெண்கல சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் மா.மாரி செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ஆ. இந்திரன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி, மாவட்ட செய்தி தொடர்பாளர்  மணிகண்டன், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீ லட்சுமி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் தீப சித்ரா, மாநகர் மாவட்ட அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணை செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 



தூத்துக்குடி 3செண்ட், முத்தையாபுரம், சூசை நகர், பகுதிகளில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் உட்பட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.