பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று (19.04.2025) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் காமராஜ் சிலை அருகில் தெட்சணாமூர்த்தி நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆத்தினார் திருவுருவ படத்திற்கு தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் மாவட்ட அவைத் தலைவர் கண்டி வேல், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அந்தோணி பிச்சை, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்துச் செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர அவைத் தலைவர் மதியழகன், மாநகர செயலாளர் உதய சூரியன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
