ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லங்கிணறு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரத்தையும் பராமரிப்பையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா. ஆய்வின்போது மாணவர்களுடன் உரையாடி, வழங்கப்படும் உணவின் தரம், சுவை, சுத்தம் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி கேட்டறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் உடன் இருந்தார்.
தொடர்ந்து திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மேல ஆழ்வார்தோப்பு சந்திரா மஹாலில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட பிரதிநிதி த.அருண்கிருஷ்ணன் - சு.சங்குபுஷ்பம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிகழ்வுகளில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகையா எம்எல்ஏ ஆய்வு – மாணவர்களின் நலனில் அக்கறை, திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 50,000 பனை விதைகள் நடும் முயற்சிக்கு தொடக்கம்!!
அடுத்த
தூத்துக்குடியில் “மகிழ்வித்து மகிழ்” அறக்கட்டளைக்கு ஆட்சியரின் பாராட்டு!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026