தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கனேஷ் நகர் பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உதவியுடன் அன்பு உள்ளங்கள் அமைப்பால் நடத்தப்பட்டு வரும் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு முதியோர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடி, அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து உரையாடினார். முதியோர்களுக்காக செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் சமூகத்தில் மிக முக்கிய பங்காற்றுகின்றன என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை நிர்வாகி விஜயா, சமூக நலத்துறை அலுவலர் பிரேமலதா, டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவையொட்டி பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, முதியோர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.