தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.


நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் மாரிப்பாண்டி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நவநீதலிங்கம், வடக்கு மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் பெப்பின்காகு, அந்தோணிராஜ், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனாமேரி, வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஜெயந்தி, ஒன்றிய துணை செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாயாண்டி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ரூபன் ராஜ், கிளைச் செயலாளர்கள் நல்லமுத்து, ஜெபமாலைராஜ், வன்னியராஜ், சேவியர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு தாமஸ் பாக்கியசெல்வி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சபரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் ஆசிரியர்–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.