அஇஅதிமுக கழக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்தன.


“எங்கள் உயிர் மூச்சே!! வாழ்க வாழ்க பல்லாண்டு” என்ற உணர்வுப்பூர்வமான வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த சுவரொட்டிகள், அரசியல் ஆசானாகவும், தொண்டர்களின் வழிகாட்டியாகவும் திகழும் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களின் அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.


இந்த விளம்பர சுவரொட்டிகளை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்னாள் மண்டல செயலாளர் சங்கர் (ATP), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓய்வு பெற்றோர் சங்கம் மாநில பொருளாளர் பேச்சியப்பன், மற்றும் அஇஅதிமுக நிர்வாகி காசி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


சுவரொட்டிகளில், அஇஅதிமுக முன்னாள் முதல்வர்கள் தெய்வத்திரு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், தெய்வத்திரு புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா,
மேலும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் நல்லாசியுடன், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


பிறந்தநாளை முன்னிட்டு நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த விளம்பர சுவரொட்டிகள், சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள் மீது தொண்டர்கள் வைத்துள்ள அன்பையும், அரசியல் வாழ்வில் அவர் பெற்றுள்ள மதிப்பையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.