தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா, கிள்ளிகுளத்தில் உள்ள வ உ சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 146 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் மாணாக்கர்கள் கல்வியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வ.உ. சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் தேரடிமணி, வாழை மற்றும் பனை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் சொர்ணபிரியா, வட்டாட்சியர் தாகிர் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்வி அலுவலர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.