கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி நகரில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில வார்டுகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அசௌகரியம் அடைந்தனர். இதனை கருத்தில் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிஎன்டி காலனி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்ததால் அப்பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தது. தற்போது அந்த மழைநீர் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தற்காலிக சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பிஎன்டி காலனி 12வது தெருவில் நடைபெறும் சாலை தற்காலிக சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது மூடப்பட்டு சாலை தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
பார்வையிடும் போது, சாலையில் தேங்கி கிடந்த மணலை பள்ளங்களில் நிரப்ப முயன்ற பணியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, “இந்த மணலை பள்ளத்தில் நிரப்ப வேண்டாம், இது வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும், விபத்து அபாயம் அதிகம்” என்று அறிவுறுத்தினார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: “கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழை பெய்தது. தற்போது பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்துவிட்டது. 16, 17 ஆகிய வார்டுகளில் அன்னை தெரசா நகர், பிஎன்டி காலனி பகுதிகளில் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிவதற்கு ஜனவரி மாதம் வரை ஆகும்.
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட 5 கிலோமீட்டர் நீள பள்ளங்களில் கான்கிரீட் போட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேங்கி கிடக்கும் காலி மனை உரிமையாளர்களுக்கு 257 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 140 பேர் தங்களின் நிலங்களை மணல் நிரப்பி சீரமைத்துள்ளனர். ஜோதி நகர் வரை 1200 பிளாட்டுகள் உள்ளன. அந்த இடங்களில் சில உரிமையாளர்களை இன்னும் கண்டறிய முடியவில்லை.
மொத்தம் 14 வழித்தடங்கள் வழியாக மழைநீர் கடலுக்கு செல்கிறது. வார்டுகள் 31, 32, 33, 16, 17, 21 முதல் 29 வரை மற்றும் 7, 8 ஆகிய வார்டுகளில் மழைநீர் பக்கீள் ஓடைகள் வழியாக வெளியேற்றப்பட்டுள்ளது. புலிப்பாஞ்சன்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி நகரிலும் மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. டி-மார்ட் எதிரிலுள்ள பெரிய பைப்பு வழியாக ஸ்டேட் பேங்க் காலனி வழியாக மழைநீர் கடலுக்கு செல்கிறது.
மழைநீர் தேங்காத நிலையை உருவாக்க, காலி இடங்களில் மணல் நிரப்புவது மட்டுமே நிரந்தர தீர்வு எனவும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் லெலின், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினர் கண்ணன், முன்னாள் கவுன்சிலரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பிஎன்டி காலனி சாலை தற்காலிக சீரமைப்பு பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம் – அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏ மார்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து!!
அடுத்த
சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026