தமிழக அரசியல் வரலாற்றில் கல்விக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்த பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் நினைவு தினம் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இந்நாளில், அவரது தியாகமும், சமூகத்திற்காக செய்த பணிகளையும் நினைவு கூர்ந்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.

“பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச உணவு போன்ற திட்டங்களை கொண்டு வந்தார் காமராஜர். கல்வியே சமூக மாற்றத்திற்கான முக்கிய கருவி என்பதை அவர் தனது ஆட்சியில் செயல்படுத்திக் காட்டினார். அவர் காட்டிய பாதையில் இன்று அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் செல்ல வேண்டும்” என்று அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவஞ்சலியில் வலியுறுத்தினார்.

அவர் மேலும், காமராஜர் போன்ற தலைவர்கள் காட்டிய வழிதான் சமூக நலனுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்பதையும் வலியுறுத்தினார்.