தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவையும், 63வது குருபூஜை தினத்தையும் முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஏ. முருகன் ஏற்பாட்டில், 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ. ஆறுமுகநயினார், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.ஜெ. தனராஜ், மாவட்ட சிறுபாண்மையினர் பிரிவு செயலாளர் கே.ஜெ. பிரபாகர், மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், இலக்கிய அணி செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யன் அடைப்பு ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், செம்பூர் ராஜ் நாராயணன், கால்வாய் பரமசிவம், அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் டைகர் சிவா, வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், வழக்கறிஞர் இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூ மணி, சரவணபெருமாள், நம்பிராஜன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அத்துடன், அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், எஸ்.கே. மாரியப்பன், கொம்பையா, ஹார்பர் பாண்டி, கே.கே.பி. விஜயன், கே.டி.சி. ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றி செல்வன், வழக்கறிஞர் ராஜ்குமார், அங்கமங்கலம் பாலமுருகன், தென் திருப்பேரை கந்தன், நீலம் நாராயணன், மணிகண்டன், மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, ராஜேஸ்வரி, ஷாலினி, ஸ்மைலா, அன்னபாக்கியம், முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வை முன்னிட்டு வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், தங்க மாரியப்பன், ஆறுமுகமங்கலம் ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஜெபராஜ் ஜெபசிங், எம்டி ராஜா, சம்படி பழனி, வினோத், லிங்கராஜ், மனோகரன், பூர்ண சந்திரன், சங்கர், இம்ரான், உதயகுமார், சுப்பிரமணியன், பாலஜெயம், சகாயராஜா, ஐடி விங் சொக்கலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு பசும்பொன் தேவரின் தியாகத்தை போற்றி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா உற்சாகம் — எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை – தூத்துக்குடியில் ஓ.பி.எஸ். அணி ஏசாதுரை தலைமையில் மாலை அணிவிப்பு!!
அடுத்த
தேவர் திருமகனாருக்கு அதிமுக வர்த்தக அணியினர் மரியாதை — முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026