“வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்”, “சாதியும், நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்துக்கும் இல்லை” என்று கூறிய தேசியத் தலைவரும் தெய்வத் திருமகனாருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி திருநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக கழக வர்த்தக அணி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக கழக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையேற்று, தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் மில்லர் R.L.ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U.S சேகர், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R. ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ்,

மாவட்ட மீனவணி துணைத் தலைவர் டெலஸ்பர், சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின் Ex.M.C, முன்னாள் பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C, மகளிர் அணி துணைச் செயலாளர்கள் ராதா ஆனந்த், சண்முகத்தாய், முன்னாள் துணைத் தலைவர் ரத்தினம், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் துரைப்பாண்டியன், Ex.மாவட்ட எம்.ஜி.ஆர். மற்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.M.C, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.*

அதேபோல், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், அருண்குமார், அந்தோனி ராஜ், பிரதிநிதிகள் பெவின், அசரியான், முருகேசன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், சங்கரி, முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து, சீனிவாசன், மோகன், லோகு கணேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரா செல்லப்பா, உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் தருவை அமலதாசன் பழம் ஆகியோரும் பங்கேற்றனர்.

போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், கருப்பசாமி, முருகன், ராஜ்குமார், பூல் பாண்டியன், முத்துக்குமார், டாஸ்மாக் தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர், மேலும் அய்யப்பன், ஸ்டாலின், அந்தோனி ராஜ், ஆசைத்தம்பி, பழனி, ராஜ்குமார், சந்தனராஜ், பாபநாசம், தனுஷ், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ்குமார், ஆறுமுகம், சித்திரைவேல், சுப்புராஜ், ஜோதிகா மாரி, ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணு தாய், முத்துமாரி, மாரியம்மாள், லெட்சுமி ஆகிய மகளிர் அணியினரும் உற்சாகமாக பங்கேற்றனர்.