ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.17.25 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பொது விநியோகக் கடை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ்வரி, பொதுப் பணித்துறை பொறியாளர் அரவிந்த், ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலர் ராஜன், கூட்டுறவு சங்க செயலர் தம்பி ராஜ், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஈஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, மகளிரணி உறுப்பினர்கள் ராமலட்சுமி, காளியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேநாளில் திருநெல்வேலி ரஹ்மத்நகர் இதயா மஹாலில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட பிரதிநிதி சாத்தான்குளம் வேல்துரை அவர்களின் இல்ல திருமண விழாவில் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் பள்ளமடை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற மானூர் யூனியன் முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலகுமார் அவர்களின் இல்ல திருமண விழாவிலும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதோடு, கோவில்பட்டி ராஜீவ் நகரில் நடைபெற்ற வழக்கறிஞர் மோகன்தாஸ் அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.