ஓட்டப்பிடாரம் தொகுதி, மாப்பிள்ளையூரணி கிராமம், அழகுமுத்து நகரில் நீண்ட நாட்களாக மின்மாற்றியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள விலையுயர்ந்த மின்பொருட்கள் டிவி, பேன், மிக்ஸி உள்ளிட்டவை சேதமடைந்து மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு மரியாதைக்குரிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களிடம் மனு அளித்தனர்.
அவர்களின் அதிரடி உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நேற்று மின்மாற்றியில் புதிய வயர் மற்றும் தளவாட பொருட்களை மாற்றி குறைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டன.
இதனால் மக்கள் நீண்டநாள் ஏற்பட்ட சிரமத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி,” என்று அழகுமுத்துநகர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அதிரடி உத்தரவால் அழகுமுத்து நகரில் மின்மாற்றி குறை உடனடியாக சரி செய்யப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செவித்திறன் குறைவுடையோருக்கான செய்கை மொழி விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026