தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பை தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள SIR வாக்காளர் திருத்தப் படிவம், இந்த மாதம் 4ம் தேதி முதல் சட்டமன்றத் தொகுதியின் 52 வார்டுகளிலும் அரசு அலுவலர்களால் வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் சிரமங்கள் இருந்தாலும், அரசு அலுவலர்கள் மக்கள் வசதிக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் எங்கு பதிவு செய்யப்பட்டிருந்தீர்களோ, அதனை அடிப்படையாகக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான படிவம் நிரப்பப்பட வேண்டும் என மேயர் தெரிவித்தார்.
வாக்காளர்கள் தங்கள் பகுதி, வாக்குப்பதிவு மையம் உள்ளிட்ட விவரங்களில் குழப்பம் ஏற்படாத வகையில், 2002 ஆம் ஆண்டு வாக்காளர் விவரங்கள் கொண்ட பட்டியல் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை பார்த்து தங்களது 2025 விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
“2002ஆம் ஆண்டு உங்கள் வாக்கு எங்கு இருந்ததோ, அதைப் பார்த்து 2025 படிவத்தை பூர்த்தி செய்வது இன்றியமையாதது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்குரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வாக்காளர்களுக்கு புதிய வழிகாட்டி: 2002 வாக்காளர் பதிவை அடிப்படையாகக் கொண்டு 2025 படிவம் நிரப்ப வேண்டுகோள் – மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கன்னியாகுமரி குளச்சலில் உலக மீனவர் நாள் சிறப்புவிழா: கனிமொழி கருணாநிதி உரையால் மீனவர்களின் உரிமை மீண்டும் ஒலித்தது!!
அடுத்த
தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்து வழிகாட்டல்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026