ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரைஸ் மில் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இக்கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவித்த ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி மு. அனுசியா, முதுகலை வணிகவியல், கல்வியியல், பொறுப்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.


தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சி தொடக்கமாக உறுதிமொழி ஏற்பும், மறைந்த சுதந்திரப் போராட்டப் போராளி ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது.


நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.மு. தமிழ்நேயன் மற்றும் சு. அன்னலட்சுமி ஆகியோர் தலைமையேற்றனர். மண்டல செயலாளர் இ. மாரிமுத்து அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மாநில பாசறை பொறுப்பாளர்கள் அந்தோணி பிச்சை, செ. பரதேசி, துரைசிங் செந்தில்குமார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்லப்பா, முருகன், சேரந்தை ராஜ், மாடசாமி, சுடலைமணி, சிவகுமார், முத்துக்குமார், கொலஞ்சி உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துரைகள் வழங்கி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.


இறுதியாக மாவட்டச் செயலாளர் தேவராஜ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தியதன் மூலம் கூட்டம் உற்சாகமான சூழலில் நிறைவுற்றது.