முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான பி. கீதா ஜீவன் உத்தரவுப்படியும், மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன் வழிகாட்டுதலின்படியும், 50வது வட்டக் கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மாமன்ற உறுப்பினர் செ. சரவணகுமார் எம்.சி. தலைமையில், அவைத் தலைவர் சிவனனைந்த பெருமாள் மற்றும் வட்டச் செயலாளர் சிங்கராஜ் முன்னிலையில், இரண்டு இடங்களில் கழகக் கொள்கைப் பாடல்கள் ஒலிபரப்புச் செய்து, பொதுமக்களுக்கு லட்டுகள் வழங்கி விழா உற்சாகமாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் வட்டக் கழக பிரதிநிதிகள் எம். வேல்மணி, ஜி.எம். செல்வம், எஸ். ராஜேஷ் லக்ஷ்மணன், கழகத் துணைச் செயலாளர்கள் ஆர். ராஜா, எஸ். மணிகண்டன், மாநகரத் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜி. சங்கரநாராயணன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் செ. கார்த்திகேயன், பகுதி ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் எம். செல்வகுமார், பகுதி சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செந்தில் குமார், இன்ஜினியர் ராமநாதன், பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் என். சீனிவாசகுமார், பகுதி தொண்டரணி துணை அமைப்பாளர் டி. செல்வின் கோவில் ராஜ், பகுதி நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், வட்டக் கழக இளைஞரணி முனீஸ்வரன், எஸ். கார்த்திக், 263 பி.எல்.சி. ராஜபெருமாள், பழனி செல்வம், 264 பி.எல்.சி. பி. கலைமணி ராஜன், 253 பி.எல்.சி. கண்ணன், 255 பி.எல்.சி. கிங்ஸ்லி, தம்பி வினோத் உள்ளிட்ட வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.