தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கணக்குக்குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளரும், கவுன்சிலருமான ரெங்கசாமி தலைமையில், டி.டி.சி. ராஜேந்திரன் முன்னிலையில் எட்டையபுரம் சாலை மெயின் ரோட்டில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 500 பிரியாணி பொட்டலங்கள் வழங்கி பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் பால் துரை, கேடிசி செல்வராஜ், இபி செல்வராஜ், சேவியர், வினோத், ராஜேஷ் உள்ளிட்டவர்களுடன் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம். பிலோமின் ராஜ் மற்றும் பல கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.