முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் இன்று காலை பழைய பேருந்து நிலையம் அருகில் கேக் வெட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு, முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாநில, மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்ததுடன், நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நடைபெற்றது.