தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நலப்பணித்திட்ட அணி எண்கள் 47 மற்றும் 57 சார்பாக 22.02.2026 முதல் 28.02.2026 வரை ஏழு நாட்கள் சிறப்பு முகாம் தருவைக்குளத்தில் சிறப்பாக நடைபெற்றது.


முகாமின் நிறைவு நாளான இன்று காலை, மாணவிகள் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு நாளைத் தொடங்கினர். தொடர்ந்து தூய மிக்கேல் சமுதாய நலக் கூடத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டு சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.


மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செல்வம் சமூக சேவை, சமூக அக்கறை மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து சிறப்புரை வழங்கி மாணவிகளை ஊக்குவித்தார்.
பிற்பகல் நடைபெற்ற நிறைவு நிகழ்வில் முனைவர் ச. ஸ்டெல்லா பாக்கியம் வரவேற்புரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் தேசிய நலப்பணித்திட்ட செயல்பாடுகள், மாணவர்களின் பங்களிப்பு மற்றும் கூட்டுணர்வு குறித்து உரையாற்றினார்.


தொடர்ந்து மாணவிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு பின்னூட்டம் அளித்தனர். முகாமை வெற்றிகரமாக நடத்த உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக புகைப்படம் எடுக்கப்பட்டது. முனைவர் மு. புஷ்பகவல்லி நன்றியுரை வழங்கினார்.