இளம் தலைமுறைக்கு திமுகவின் கொள்கைகள், சாதனைகள், வரலாற்றை எளிமையாக எடுத்துரைக்கும் நோக்கில் திமுக இளைஞரணி சார்பில் முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டு வரும் “முரசொலி பாசறை” பக்கம், தனது 1,000வது இதழை எட்டியுள்ளது.
இந்த சிறப்புமிக்க இதழின் பிரதியை திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், “முரசொலி பாசறை”யின் தொடர்ச்சியான பங்களிப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இதழின் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூர்ந்தனர்.
முரசொலி பாசறை, திமுகவின் சிந்தனைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை இளம் தலைமுறைக்கு எளிய வடிவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
தூத்துக்குடி
முரசொலி பாசறை 1000வது இதழ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நேர்மையே நம் நம்பிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி!!
அடுத்த
அதிமுக வளர்ச்சி பணிகளில் முனைப்பாக செயல்பட்ட சி.த.செல்லப்பாண்டியனை பாராட்டிய எடப்பாடி பழனிச்சாமி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026