அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் வலுவூட்டல் பணிகளை முழு வேகத்தில் முன்னெடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வாணிக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன், தனது பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வளர்ச்சி பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
“செல்லப்பாண்டியன் அவர்கள் கட்சிக்காக ஆற்றிய சேவை சிறந்தது. இதுபோன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோர் மூலமே அதிமுக மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியை நோக்கிச் செல்லும். வரவிருக்கும் தேர்தல் நமது காலமாக இருக்கும்,”
என்று உற்சாகத்துடன் பாராட்டு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பாலாஜி ஸ்ரீகாந்த், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெ. பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அதிமுக வளர்ச்சி பணிகளில் முனைப்பாக செயல்பட்ட சி.த.செல்லப்பாண்டியனை பாராட்டிய எடப்பாடி பழனிச்சாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முரசொலி பாசறை 1000வது இதழ் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
அடுத்த
பெண்களை கவரும் திமுகவின் புதிய முயற்சி — அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026