2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் பிரச்சாரத் திட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில், தூத்துக்குடி தொகுதி திமுக சார்பில் புதுமையான யுக்தி ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், வாக்காளர்களை, குறிப்பாக பெண்களை கவரும் நோக்கில் ‘அஞ்சல் வழி பிரச்சாரம்’ எனும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாநகர திமுக பெயரில், வீடுகள்தோறும் தபால் அனுப்பப்பட்டு வருகிறது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் முக்கிய பிரச்சார அம்சமாக இடம்பெற்றுள்ளது.
தபாலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட கொள்கையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறார். ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மூலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளது. வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தந்து இந்த மக்கள் நல ஆட்சியை தொடரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”
தூத்துக்குடியில் பலரது வீடுகளுக்கு சென்றடைந்த இந்த தபால் தற்போது மக்களிடையே பெரும் கவனம் ஈர்த்துள்ளது. அரசியல் வட்டாரங்களில், “மக்களின் மனதில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் தபால் யுக்தி, திமுகவுக்கு தேர்தல் பலனாக அமைய வாய்ப்பு அதிகம்” என மதிப்பிடப்படுகிறது.
தூத்துக்குடி
பெண்களை கவரும் திமுகவின் புதிய முயற்சி — அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிமுக வளர்ச்சி பணிகளில் முனைப்பாக செயல்பட்ட சி.த.செல்லப்பாண்டியனை பாராட்டிய எடப்பாடி பழனிச்சாமி!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026