கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.74.22 லட்சம் மதிப்பீட்டில் மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தாஹிர் அஹமத், பள்ளித் தலைமை ஆசிரியர் அருணா செல்வி, பொதுப்பணித்துறை பொறியாளர் ரேணுகா, வருவாய் ஆய்வாளர் மாதவன், ஊராட்சி செயலர் முருகன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுப்பையா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதசாமி, கழக நிர்வாகிகள் அழகர்சாமி, குமார், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெனிஷா, உதவி பொறியாளர் தளவாய், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஊராட்சி செயலர் மாரியப்பன், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடசுப்பு, துணைச் செயலாளர்கள் பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வல்லநாடு அகரம் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். அதே கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் வட்டாட்சியர் தாகீர் அகமது, உதவி பொறியாளர் தளவாய், வட்டார வழங்கல் அலுவலர் சகிலா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் ரம்யா, ஊராட்சி செயலர் மாரியப்பன், கழக நிர்வாகிகள் ராமசாமி, வெங்கடசுப்பு, பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, சந்திரா முருகன், லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேநேரத்தில், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்புரம் ஊராட்சி பசும்பொன் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். மேலும் வசவப்புரம் ஊராட்சி அம்பேத்கார் நகரில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் தாஹீர் அகமது, உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தளவாய், வட்டார வழங்கல் அலுவலர் சகிலா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி செயலர் முத்து, கழக நிர்வாகிகள் ராமசாமி, பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பந்தல் பரமசிவன், கிளை செயலாளர் செல்லதுரை, குமார் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.