விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் சாலை – தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், சோலைசாமி, புதுராஜன், ராமலிங்கம், தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திருமணிபாண்டியன், பேரூர் கழகப் பொருளாளர் சரவணன், ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம், துணைச் செயலாளர் வேலுச்சாமி, வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், லெனின், முத்துமாரியப்பன், சங்கரலிங்கம், ராஜதுரை, ஸ்டாலின்கென்னடி, அய்யனார், சுப்புராஜ், தமிழரசன், தாளமாணிக்கம், மாரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி செண்பகராஜ், சுப்புராஜ், குறிஞ்சி, பிரியா, முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K. ராமமூர்த்தி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் ஜஸ்டின் பிரபாகரன், காளிதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.