விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-வது நிதி குழு மானியம் மற்றும் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடம் மற்றும் சுகாதார வளாகம் புதிய கட்டிடங்கள் எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தவசிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், செல்வராஜ், மும்மூர்த்தி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், சோலைசாமி, புதுராஜன், ராமலிங்கம், தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திருமணிபாண்டியன், கழகப் பொருளாளர் சரவணன், ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம், கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி, வார்டு செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேசன், லெனின், முத்துமாரியப்பன், ராஜதுரை, ஸ்டாலின்கென்னடி, அய்யனார், சுப்புராஜ், தமிழரசன், தாளமாணிக்கம், மாரிராஜ், வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி, செண்பகராஜ், சுப்புராஜ், குறிஞ்சி, பிரியா, முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K. ராமமூர்த்தி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பள்ளி மாணவ–மாணவியரும் கூட்டாக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை வரவேற்றனர்.